தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 28 டிசம்பர், 2017

காத்திருக்கும் போராட்டம்

 பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்
=============================================================

நன்றி தீக்கதிர்

ஈரோடு,டிச.28-
பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று இரண்டாவது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களின் பணியின் தன்மைக்கேற்ப வரிசைப்படுத்தி, உடனடியாக உயர் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 மணி நேரம் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட வேண்டும்.சாக்கடையிலும், சகதியிலும் குழி தோண்டி கேபிள் பழுதுபார்க்க நிர்பந்திக்கக் கூடாது. ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் 2009- 2010 ஆண்டிற்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாகவியாழனன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கண்ணுசாமி, தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என்.சண்முகவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்தார். பிஎஸ்என்எல் ஊழியர்கள்சங்க மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன், எஸ்என்இஎ மாநில செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் வி.மணியன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் என்.குப்புசாமி உட்பட பெரும் திரளானோர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை பிஎஸ்என்எல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றபோராட்டத்திற்கு பிஎஸ்என்எல்ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஜாபர், தமிழ்நாடு ஒப்பந்ததொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் செயலாளர்கள் ராஜேந்திரன், ரவிக்குமார், நிர்வாகிகள் சுப்பிரமணியம், சக்திவேல் உள்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.